MuraliKrishnan
பாரம்பரிய மரு. சிவ ராஜேந்திரன்
எம்.எஸ்சி. யோகா
2004 முதல் பயிற்சி செய்பவர்
Contact +91 97905 67188
+91 97905 67188
ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஷ்ரமம்,
பதிவு எண் - 89/2010,
19.E, சிங்கபெருமல் கோயில் சன்னதி தெரு
காஞ்சிபுரம் - 631 501

# வாயு முத்திரா

# வாயு முத்திரை (சின் முத்திரை):

நாம் சுவாசிக்கும் காற்றிலுள்ள பிராணவாயு நம்முடைய ஒவ்வொரு செல்லுக்கும் அவசியமானது. காற்று எனும் பஞ்சபூதம் சமநிலை தவறும் பொது உடல் பிணி உண்டாகிறது. மனம் தடுமாறுகிறது. இந்த வாயு முத்திரையை தொடர்ந்து செய்து வரும்போது உடலின் காற்று சக்தி சீர்படுகிறது.

# செய்முறை:

  • சுட்டு விரலை மடித்து பெருவிரலின் அடிப்பாகத்தை தொடுங்கள்.
  • மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.

# அமரும் நிலை :

சித்தாசனம், பத்மாசனம், வஜ்ஜிராசனம்

# நேரம்:

5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை

# பலன்கள்:

  • வாயுவினால் ஏற்படும் பிடிப்புகள் வலிகள், கழுத்து வலிகள் குணமாகிறது
  • அஜீரணம், வயிற்று உப்பசம் குணமாகும்
  • உடலுக்கு புது சக்தி கிடைக்கிறது