MuraliKrishnan
பாரம்பரிய மரு. சிவ ராஜேந்திரன்
எம்.எஸ்சி. யோகா
2004 முதல் பயிற்சி செய்பவர்
Contact +91 97905 67188
+91 97905 67188
ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஷ்ரமம்,
பதிவு எண் - 89/2010,
19.E, சிங்கபெருமல் கோயில் சன்னதி தெரு
காஞ்சிபுரம் - 631 501

# ஸ்திர சுகமாஸனம் – பதஞ்சலி

உறுதியாகவும் சுகமாகவும் இருப்பது ஆசனம் உடலுக்கு பூரண ஓய்வு கொடுக்க உடல் உணர்வை வென்று உடலை உறுதியாக வைத்திருப்பது. ஆசனங்கள் நாம் நம்முடைய கடமையை செய்ய உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் மனதிற்கும் அதனால் ஏற்படும் உபாதைகள் முதுகுவலி, கழுத்து வலி, போன்றவைகள் அதிகமாகி வருகின்றன. இதற்கு தேவை நமக்கு சரியான உடற்பயிற்சிதான் ஆசனங்கள். இதனால் நம்முடைய உடலின் தசைகளுக்கு தேவையான சத்துப்பொருட்கள் ஆக்ஸிசிஜன் சீராக செல்கிறது. நாளமில்லா சுரப்பிகளும் உடல் உறுப்புகளும் சரியான முறையில் இயங்குகிறது. ஆசனங்கள் மூன்று பிரிவுகளாக செய்யப்படுகின்றன. இதில் முதலாவது ஆரம்ப நிலையிலிருந்து இருக்கைக்கு செல்லும் நிலை. இரண்டாவது உடலை ஒரே நிலையில் வைத்திருப்பது. இது மிகவும் அவசியமானது. உடற்பயிற்சிக்கும் ஆசனங்களுக்கும் உள்ள வித்தியாசமே இதுதான். மூன்றாவது திரும்பவும் ஆரம்ப நிலைக்கு வருவது.

முன்புறம் குனியும் ஆசனங்களால் வயிற்று பகுதி உறுப்புகள் நன்றாக இயங்கி ஜீரண சக்தியை அதிகரிகின்றது. பின்புறம் குனியும் ஆசனங்களால் நுரையீரல், இருதயம் நன்றாக இயங்கி இரத்த ஓட்டத்தையும், சுவாசத்தையும், நன்றாக இயக்குகிறது. முதுகு தண்டை முறுக்கும் ஆசனத்தால் நரம்பு மண்டலங்களின் இணைப்பு மூளைக்கும், தசைகளுக்கும் எப்பொழுதும் நன்றாக இயங்குகிறது. தலைகீழ் செய்யும் ஆசனங்களால் மூளைப்பகுதிகளுக்கும் தேவையான இரத்த ஓட்டம் செல்கிறது. யோகாசனங்கள் என்பது உடலை ஒரு நிலையில் இருப்பது. இவற்றில் இரண்டு பிரிவுகள் உண்டு.

# பிரிவு 1:

ஹத யோகத்தின் மூல நூல்களின் அடிப்படையில் எழுந்தவை. இதில் வேகமாய் திரும்பத் திரும்ப செய்தல் அதிர்ச்சியுடன் ஒடித்தாய் போல் செய்தல் ஆகியவைகள் உண்டு.

# பிரிவு 2:

பதஞ்சலி முறையில் மனச்சமத்துவம் ஓய்வுணர்ச்சி. அதிகம் பிரயாசை இன்மை இவற்றுடன் அதிர்ச்சி இன்றித் தொடர்ந்து யோகாசனங்கள் செய்யப்படுகின்றது. இதில் அதிக நேரம் முழுமை நிலையில் உடலை வைத்திருப்பதற்கு முக்கியத்துவம் உண்டு.

# வகைகள்:

ஆசனங்கள் மூண்று வகைகள் உள்ளன.

  • தியானம் செய்வதற்கான ஆசனம்.
  • உடலை தளர்வுப்படுத்துவதற்கான ஆசனம்
  • பண்பாட்டு ஆசனம்

# பகுதி:

ஆசனங்கள் நான்கு பகுதிகள் கொண்டுள்ளன.

  • நின்று கொண்டு செய்யும் ஆசனங்கள்
  • உட்கார்ந்து செய்யும் ஆசனங்கள்
  • வயிற்றுபுறம் படுத்தும் செய்யும் ஆசனங்கள்
  • முதுகத் தண்டைக் கீழே வைத்து படுக்கும் ஆசனங்கள்

# ஆசனங்கள் செய்யும் பொது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

  • சீராக செய்ய வேண்டும்.
  • உணர்வு பூர்வமாக செய்ய வேண்டும்.
  • சுகமாக ஸ்திரமாக இருக்க வேண்டும் 20 நொடியிலிருந்து 3 நிமிடம் வரை
  • நல்ல காற்றோட்டம் / சூரிய ஒளி உள்ள இடம்
  • நல்ல தளர்வான ஆடைகள்
  • தகுந்த குருவின் மேற்பார்வை (துவக்கத்தில்)