MuraliKrishnan
பாரம்பரிய மரு. சிவ ராஜேந்திரன்
எம்.எஸ்சி. யோகா
2004 முதல் பயிற்சி செய்பவர்
Contact +91 97905 67188
+91 97905 67188
ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஷ்ரமம்,
பதிவு எண் - 89/2010,
19.E, சிங்கபெருமல் கோயில் சன்னதி தெரு
காஞ்சிபுரம் - 631 501

# யோகா

யோகா என்பது மிகவும் புனிதமான ஆன்மிக செயல்முறை அறிவியல். இது உடல், சுவாசம், மனம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. சில வகைபடுத்தப்பட்ட யுக்திகளை கொண்டு சரீரத்திற்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தி பரிபூரண ஆனந்த நிலையை அடையச் செய்வதே யோகத்தின் குறிக்கோள்.

மனிதனின் ஒழுங்கற்ற நிலையை யோகம் திருத்தி அமைக்கும், உயிர் வளியின் (காற்றின்) அளவை அதிகரிக்கும் மற்றும் சுவாசம், ஜீரணம், நாளமில்லா சுரப்பி, இனப்பெருக்கம் ஆகிய மண்டலங்களின் செயல் திறனை அதிகரிக்கிறது. மனதினை சாந்தபடுத்தி, உணர்வுகளை கட்டுபடுத்தி மனம் அலை பாய்வதால் தோன்றும் மனஅழுத்தம், தூக்கமின்மையை போக்குகின்றது. குறிப்பாக எதிர்கால சமுதாயத்தினை நலமாகவும், வளமாகவும் மாற்றும் மாபெரும் சக்தி யோகாவிற்கு உள்ளது.

எல்லா நேரங்களிலும் அடியேனுக்கு பேரறிவு மயமாய் இருந்து, என்னை வழி நடத்தி செல்லும் என் குரு ஞான ஒளி மகானின் பாதம் பணிந்து, மக்களுக்கு அன்புடன் சமர்பிகின்றோம்.


யோகேண சித்தஸ்ய பதேனவாசா
மலம் சரீரஸ்யச வைத்யகேன
யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்
பதஞ்சலிம் ப்ராஞ்ஜலிரான தோஸ்மி
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!


# விளக்கம்:

நான் கரங்குவித்து பதஞ்சலியை வணங்குகிறேன். அவர் ரிஷிகளுள் மிகவும் மேன்மையானவர். மனத்தில் உள்ள குற்றங்களை யோகா சாஸ்திரத்தினாலும் வாக்கினை இலக்கண சாஸ்திரத்தினாலும் உடம்பில் உள்ள நோய்களை ஆயுர்வேதத்தினாலும் அவர் தூய்மைபடுதுகின்றார்.

யோகம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது, மேன்மையானது என்று பொருள் கொள்ளலாம். இந்த யோகத்தின் முக்கிய குறிக்கோள் இறைநிலையை உணர்தல். அதற்கு உடல் என்ற ஊடகம் மிக மிக அவசியம்.

    “உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் உடம்பினில் 
    உத்தமனைக் காண்”
            - ஔவை

    “ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால் 
    காயமான பள்ளியில் காணலாம் இறையை”
            - சிவவாக்கியர் 

    “உடம்பினை முன்னம் இழுக்கென என்றிருந்தேன் 
    உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன் 
    உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
    உடம்பினை யான் இருந்து ஒம்புகேன்றேனே”
            - திருமூலர்

    “உடம்பால் அழியில் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”
            - திருமூலர்

இவ்வாறாக உடலின் மேன்மையை / உயர்வை / ஆரோக்கியத்தை மகான்கள் மிகவும் உயர்வாக போற்றி உள்ளனர். இவ்வாறான இவ்வுடல் ஆரோக்கியம் அடைய என்றும் உறுதுணையாக இருப்பது கலையே.

இந்த யோகம் அடிப்படையில் உடல், மனம், நல்அறிவு என்னும் மூன்றையும் ஓர் மையத்தில் இணைத்து பேரானந்தத்தை அளிக்கிறது. பொதுவாக யோகா அபியாசம் என்பது மிகவும் மேம்படுத்தப்பட்ட, உயர்நிலை உடற்பயிற்சிகள் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் ஆகும்.

# அட்டாங்க யோகம் :

    “இயம நியமமே எண்ணிலா ஆதனம் 
    நயமுறு பிரணாயாமம்  1பிரத்தி யாக 
    சயமிகு தாரணை தியானஞ் சமாதி
    அயமுறும் அட்டாங்க மாவது மாமே”
            - திருமந்திரம்

எட்டு படிநிலைகளை ஆதாரமாக கொண்டு சாதாரண மனித நிலையில் இருந்து உயர்வான இறைநிலைக்கு நம்மை வழிநடத்தி செல்வதே இந்த அட்டாங்க யோகமாகும்.

# பகிரங்க யோகம் :

  1. இயமம் - சமூக ஒழுக்கம்
  2. நியமம் - தனி மனித ஒழுக்கம்
  3. ஆசனம் - இருக்கை நிலை (உயர்நிலை ஆசன உடற்பயிற்சிகள்
  4. பிராணாயம் - பிராணனை கட்டுபடுத்துதல் (மூச்சுப் பயிற்சிகள்)

# அந்தரங்க யோகம் :

  1. பிரத்யாகாரம் - புலன்களை கட்டுபடுத்துதல்
  2. தாரணை - மனதை நடுநிலைபடுதுதல்
  3. தியானம் - மனதை கடத்தல்
  4. சமாதி - இறைக்கு சமமாதல்

இதில் முதல் நான்கு பகிரங்க யோகம் எனவும் அடுத்த நான்கு அந்தரங்க யோகம் எனவும் பிரிதறியப்படுகிறது.

# சுவாச ஓட்டமும் அதன் சூக்குமங்களும்:

நம் சுவாச ஓட்டமானது 2½ நாழிகைக்கு ஒரு முறை சரம் மாறி மாறி ஓடிகொண்டே இருக்கிறது. அதாவது இடது வலது என சுவாசம் மாறி மாறி ஓடிக் கொண்டு இருப்பதை மிகவும் சூக்குமாக இதில் நடக்கும் அதிசயங்களை மகான்கள் எடுத்து இயம்புகின்றனர்.

	“ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் 
	காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை 
	காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக் 
	கூற்றை யுதைக்கும் குறியது வாமே
            - திருமூலர்

இடகலையில் (சந்திர நாடி)லும் பிங்கலையில் (சூரிய நாடி)லும் மேலும் சுழுமுனை மத்தியில் ஓடுவதும் இந்த சுவாசத்தினை அஸ்வினி குமாரர்கள் என்று புராணங்களிலும், “சிவசஸ்வரோதயம் “ என்ற சுவாச சாஸ்திர நூலும் கூறுகிறது.

இந்த சுவாசங்கள் வளர்பிறை அமாவாசைக்கு அடுத்த 14 நாட்களிலும், தேய்பிறை அமாவாசைக்கு அடுத்த 14 நாட்களிலும் – ஒவ்வொரு நாளுக்கும் வித்தியாசமாக இடது, வலது நாசிகளில் மாறி மாறி ஓடுகிறது.

இவ்வாறு இருக்கும் சுவாசத்தை ஒழுங்குபடுத்துவது அதன் மூலமும் / கட்டுபடுத்துவதன் மூலமும் நமது ஆயுளையும் நல்ல உயர் மனநிலையையும் பெற முடியும் என்று ரிஷிகளால் கூறப்பட்டுள்ளது.

# ஆயுளின் இரகசியம் சுவாசம் (சரம்):

பொதுவாக மனிதனின் இயல்பு சுவாசம் 1 நிமிடத்திற்கு 14லிருந்து 16 வரை ஆக 1 மணிக்கு 21,600 தடவை என யோக சாஸ்திரம் கூறுகிறது.

உலகில் தோன்றிய எல்லாவற்றிற்கும் தோற்றம் இருந்தால் முடிவும் உண்டு. இது அதன் இயக்கம் / பயன்பாடு பொருத்தது.

நாம் ஓர் வீடுகட்டினால் அது சுமார் 50 ஆண்டுகள் / 100 ஆண்டுகள் என நிலைநிருத்துகின்றோம். ஓர் வாகனம் வாங்கினால் கூட 15 ஆண்டுகள் 20 ஆண்டுகள் என நிர்ணயிகின்றோம். வீடோ / வாகனமோ னாம் சரியாக பராமரித்து பயன்படுத்தினால் அதன் ஆயுள் கூடும் என்பது போலவே நம் உடலை நாம் சரியாக பயன்படுத்தினால் 120 ஆண்டுகள் எனவும் 1008 ஆண்டுகள் எனவும் பற்பல ஞானிகளும் சித்தர்களும் கூறியுள்ளனர்.

இக்காலகட்டத்தில் நாம் 80 ஆண்டுகள் இன்புற்று வாழ்தலே போதும் என அடியேன் எண்ணுகின்றேன். அதற்கு இந்த யோகசுவாசம் எவ்வாறு பயன்படுத்தலாம் என ஆராய்ந்ததில்,

நாம் நம் சுவாசத்தின் அளவை குறைத்து பயன்படுத்தினால் என்பதை அறியமுடிந்தது.

  • பயம் / பதட்டம் / அதிர்ச்சி / கோபம் – என்ற எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் பொது – அதிக சுவாசமும்
  • அமைதி / தெளிவு / ஆனந்தம் / தியானம் / யோகம் – போன்ற நேர்மறை நிகழ்வுகளில் சுவாசம் குறைந்து ஆரோக்கியம் அதிகரிகின்றது என்பது அறிவியல் பூர்வமான உண்மை.