# வருண முத்திரா
நீரின்றி அமையாது உலகு. அதே போல நீர இன்றி உலவாது உடல்! என்றே சொல்லலாம். நம் உடலின் 70% சக்தி நீர சக்திதான். நம் உடலிலுள்ள நீர சரிவர இயங்கும்போதுதான் செல்களின் இயக்கம் செரிமானம் இரத்த ஓட்டம் உயிர்சக்தியின் ஓட்டம் ஆகியவை நலமாக இருக்கும்.
# செய்முறை:
கட்டை விரலின் நுனிப்பகுதி சுண்டு விரலின் நுனியோடு இணைய வேண்டும் மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.
# அமரும் நிலை :
சித்தாசனம் (அ) பத்மாசனம்
#3 நேரம்: மழை காலங்களில் 10 நிமிடம் மற்ற நேரங்களில் 24 முதல் 48 நிமிடம் வரை
# பலன்கள்:
- உடலின் சூடு தணிந்து, நாவறட்சி அகலுகிறது.
- தோலிலுள்ள வறட்சி மறைந்து தோல் பளபளப்பாகிறது.
- இரத்த ஓட்டம் சீராகிறது.
- முதுமை மறைந்து இளமையான தோற்றம் உருவாகிறது