# பிரித்திவி முத்திரா
நம் உடலின் அடிப்படை மண் தத்துவம் ஆகும், நிலாம் என்பது பல பண்புகளை குறிக்கிறது. ஆதாரமான – உறுதியான – அசைக்க முடியாத – பொறுமையுள்ள – என பல பண்புகளை பெற்றுள்ளது. நிலாம் எனும் பூதம் சம நிலையில் இல்லாத போதுதான் மனிதனின் உறுதி குறைகிறது.
# செய்முறை:
மோதிர விரல் நுனி பகுதி பெருவிரலின் நுனிப்பகுதியோடு இணைப்பதுவே பிரித்திவி முத்திரை ஆகும்.
# அமரும் நிலை :
வஜ்ஜிராசனம், மற்ற தியான நிலை ஆசனங்கள்.
# நேரம்:
அதிகபட்சம் ஒரே நேரத்தில் 24 நிமிடம் துவக்கத்தில் 6 நிமிடம் பின்னர் 12 நிமிடம் இறுதியாக 24 நிமிடம் வரை உயர்த்தலாம்.
# பலன்கள்:
- உடல் உறுதியாகிறது. (மனமும்)
- நடக்கும்போது ஏற்படும் தடுமாற்றம் குறைகின்றன.
- சளி, மூக்கடைப்பு, சைனஸ் அகலும்
- செரிமான சக்தி அதிகமாகிறது.
- உடல் எடை குறைகிறது.
- உடல் வெப்பநிலை சீராகிறது.
- தன்னம்பிக்கை, பொறுமை குணம் அதிகமாகிறது.