MuraliKrishnan
பாரம்பரிய மரு. சிவ ராஜேந்திரன்
எம்.எஸ்சி. யோகா
2004 முதல் பயிற்சி செய்பவர்
Contact +91 97905 67188
+91 97905 67188
ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஷ்ரமம்,
பதிவு எண் - 89/2010,
19.E, சிங்கபெருமல் கோயில் சன்னதி தெரு
காஞ்சிபுரம் - 631 501

# பிரணயம் (பிராணாயாமம்)

யோக மூல குரு பதஞ்சலி போதித்த அஷ்டாங்க யோகத்தில் ஒரு அங்கம் பிராணாயாமம். இதன் நோக்கம் நோய்களில் இருந்து விடுபட்டு மனிதர்கள் நலம் பெறுவது மட்டுமல்ல. மென்மையான ஸ்வஸ்த்த நிலை ஆகும். அதாவது தன்னில் தானே நிலைபெறுவதாகும்.

பிராணன் நுரையீரல்களை இயக்குகின்றது. நுரையீரல் இயக்கம் காற்றை உள்ளே இழுக்கின்றது. 
ஆகவே, பிராணாயாமம் என்பது சுவாசம் இல்லை. நுரையீரல்களை இயக்கம் தசைகளின் சக்தியைக் 
கட்டுபடுத்துவதே பிராணாயாமம் ஆகும்.
    -	சுவாமி விவேகானந்தர்

பிராணாயாமத்தின் மூலமாகவே முழுமையான யோகப்பயிற்சி நிறைவுறும்.

“ப்ராணா ஹி பூதனமாயு” – பிராணனே உயிர் வாழ்வு.

இது எல்லா உயிர்களிலும் இருக்கின்றது. அண்ட சராசரத்தில் அதாவது அண்டத்தில் சரம் என்னும் சுவாசிக்க கூடியது சரா என்னும் சுவாசிக்காத என்னும் பொருள்.

இதில் முக்கியமாக மூன்று நிலைகள் உண்டு.

  1. பூரகம் - உள்மூச்சு
  2. ரேசகம் - வெளிமூச்சு
  3. கும்பகம் - அடுக்குதல்

இதில் கும்பகம் இரண்டு வகைப்படும்.

  1. அந்தர் கும்பகம் – மூச்சை வாங்கி நிறுத்துவது
  2. பாக்கிய கும்பகம் – மூச்சை விட்டு நிறுத்துவது

# தச நாடிகள் :

  1. சின்குவை - உள்நாக்கில் நின்று விழுங்குவதற்கு துணை புரியும் நாடி
  2. புருடன் - வலது கண்ணில் (புருவம்) இருந்து செயல்படுவது
  3. காந்தாரி - இடது கண்ணில் இருந்து செயல்படுவது
  4. அத்தி - வலது காதில் நிற்பது
  5. அலம்படை - இடது காதில் நிற்பது
  6. சாங்கினி - ஆண் / பெண் குறிவாய் நிற்பது
  7. குரு - குதத்தில் நிற்பது

# தச வாயுக்கள்:

பஞ்ச மகா பிராணா பஞ்ச உப பிராணா என வகைபடுத்தப் பட்டுள்ளது.

# பஞ்ச மகா பிராணா:

  1. பிராணா - மூலதாரத்தில் தொடங்கி சுவாசமாக
  2. அபானன் - சுவாதிட்யானத்தில் தொடங்கி மலத்தை கிழ்நோக்கி
  3. வியானன் - தோளிலிருந்து எல்லா நாடிகளுக்கும் வியாபிக்கிறது
  4. உதானன் - உணவின் சாரத்தை உடலின் முழுமைக்கும் எடுத்து செல்லுதல் மற்றும் மேல்நோக்கிய இயக்கம்
  5. சமானன் - நாபி முதல் பரவும் வாயுக்களை சமபடுதுத்தல்

# உபபிராணா :

  1. நாகன் - கண்களை மூடி திறக்க
  2. கூர்மன் - கொட்டாவி
  3. கிருகரன் - இருமல்
  4. தேவதத்தன் - சோம்பல் முறிவு
  5. தனஞ்செயன் - இறந்து மூன்றாம் நாள் தலை வழியாக வெளியேறி உடலினை சிதைத்தல்

# பிரணாயமத்தின் வகைகள் :

  • பல வகைகளில் இந்த பிராணாயாமம் செயல்படுகிறது.
  • கழிவுகளை வெளியேற்றும் பிராணாயாமம்
  • இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தும் பிராணாயாமம்
  • நல்ல ஆற்றலை நிரப்புவதற்கான பிராணாயாமம்
  • மன இறுக்கம் / அழுத்தம் போக்கும் பிராணாயாமம்
  • உடலை வெப்பப்படுத்தும் பிராணாயாமம்
  • உடல் எடையை குறைத்திடும் பிராணாயாமம்
  • நல்ல அமைதி / நிம்மதி உணைவை ஏற்படுத்தும்.

இவ்வகையில்,

கபாலபதி பஸ்திரிக்கா, துருத்தி, யோக சுவாசம், ஏக கபாலபதி, உஜ்ஜை, கபாலகிரியா, கணபதி சுவாசம், அணுலோம், விலோம் (சந்திர நாடி) சூரிய நாடி, சந்திர, சூரிய பேதனா, சிசுபால சுவாசம், சந்திர நாடி, நாடி சுத்தி, சாவித்திரி, நாக பிராணயாமம், சததந்தா, சித்தலி, சீத்தாரி, பிரம்மரி(கன்முகி) இன்னும் பல வகைகளில் விரிந்து மிக நுட்பமான பலன்களை தருகிறது.