# பிராண முத்திரா
ஆயுர்வேதம் (ம) யோக சாத்திரங்களில் பத்து முக்கிய வாயுக்கள் உடலை இயக்குகிறது. அதில் முக்கியமானது பிராணன். இது சக்தி வாய்ந்த முத்திராவாகும்.
# செய்முறை:
- சுண்டு விரல், மோதிர விரல், ஆகியவற்றின் நுனிப்பாகம் கட்டை விரலின் நுனி பாகத்தோடு இணைக்கப் பட்டுள்ளது.
- மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.
# நேரம்:
பிராணன் முழுமையாக நிறைய இந்த முத்திரையை 48 நிமிடம் தொடர்ந்து செய்ய வேண்டும். துவக்கத்தில் 15 நிமிடம் படிப்படியாக 48 நிமிடமாக உயர்த்தவும்.
# பலன்கள்:
- சோர்வு அகலும், உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும்.
- பிராணனின் அளவு அதிகரிப்பதால் உடலின் சக்தி பெருகுகிறது.
- நரம்பு தளர்ச்சி அகலும் (பக்கவாதத்திற்கு சிறந்த முத்திரை)
- ஆழ்நிலை தியானம் கைகூடும்.
- புத்தி கூர்மை, நினைவாற்றல் தெளிவு உண்டாகும்.
- கண்பார்வை கூர்மையாகும்.
- மூச்சுக்குழல் உறுதியாகும். ஆஸ்துமா அகலும்.