# முத்திரா யோகம்
“வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்”
- பாவேந்தர் பாரதிதாசன்
ஆம்! நம் விரல்கள்தான் நம்மை காக்கும் முதல் உயிர் தோழன் எனவே அவனை தினமும் கவனியுங்கள். நேசியுங்கள் ஆரோக்கியம் அடையுங்கள். நோயின்றி வாழவும், குறைவற்ற செல்வம் பெறவும், ஆன்மீக ஏற்றம் பெறவும், ஞானிகாளால் வடிவைமைக்கப்பட்டதே இந்த முத்திரா யோகம் ஆகும். இந்த அற்புத யோகத்தை அடியேனின் சிற்றறிவிற்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்து, அதனை ஆராய்ச்சி செய்து எளிமைபடுத்தி வெளியிடுகின்றேன்.
# முத்திரா யோகத்தின் முகவுரை:
- கைவிரல்களால் செய்யப்படும் தந்திரயோக பயிற்சியே முத்திரை.
- எளிமையாக அனைவரும் பின்பற்றக்கூடிய பயிற்சி, கற்பது மிகமிக எளிது.
- 5 வயதுக்கு மேல் அனைவரும் பயிற்சி செய்யலாம்.
- படுக்கையில் இருக்கும் நோயாளிகள் கூட எளிமையாக இப்பயிற்சியினை மேற்கொள்ளலாம்.
- விரைவில் மிக அற்புதமான பலன்களை தரக்கூடியது
- அற்புதமான பலனை உடனடியாக நீங்கள் உணரலாம். (10 நிமிட நேரத்தில் உங்களால் உணர முடியும்)
- இனம், மதம், ஆண், பெண் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் இந்த பயிற்சி மனித குலத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்.
# முத்திரைகளின் செயல்பாடுகள்:
- பரு உடல், உணர்வு உடல், ஆன்மா ஆகிய மூன்று தளங்களிலும் முத்திரை செயல்படும்.
- துவக்க நிலையில் பருஉடலில் பல மாற்றங்களை உங்களால் உணரமுடியும். தொடர்ந்து செய்துவர உணர்வு நிலையிலும் பல மாற்றங்களை உணரலாம்.
# முத்திரை யோகத்தின் முக்கியத்துவம்:
மனிதன் அற்புத சக்தி படைத்தவன், பல கோடிக்கணக்கான அற்புத ஆக்கபூர்வமான ஆற்றல் படைத்தவன். அனால் அதனை ஒரு சிலரால் மட்டுமே உணர முடிகிறது. அனைவரும் அதில் ஒன்றான இந்த முத்திரா யோகம் என்னும் தந்திர யோகத்தை கற்று மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடனும், வளமான வாழ்வுடனும், மகிழ்ச்சியான மனநிலை உடனும், வையத்துள் வாழ்வாங்கு வாழ செய்வதே அடியேனின் எண்ணம் அதற்கான ஒரு முயற்சியின் பயிற்சியே இந்த முத்திரா யோகம்.
எந்த ஒரு தொடர்பு சாதனமும் இன்றி எவ்வாறு நம் கைபேசி வேலை செய்கிறதோ அதே போல விரல்களின் அசைவுகள், மடிப்பு, அழுத்தம் ஆகிய செயல்பாடுகளின் மூலம் உடலின் வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு சக்தியோட்டம் தடையில்லாமல் நடைபெற செய்து உணடலினை ஆரோக்கியமடையச் செய்கிறது.
நமது உடலின் மிக முக்கியமான மின்காந்த சக்திகள் கொண்ட உறுப்புகள் கைகள், கால் பாதங்கள், காதுகள், நாக்கு, மூக்கு, தலைப்பகுதி, குறிப்பிட்ட இடங்களில் சக்தி மையங்கள் (சக்கரங்கள்) சிறிய அளவிலான வடிவில் நிரம்பி கிடக்கிறது. இதனை ஆற்றல் அடைய செய்வதே முத்திரா யோகத்தின் முக்கிய பணி.
# முத்திரை பயிற்சியின் பலன்கள்:
- நோய்கள் வராமல் இயன்ற அளவு தடுத்து கொள்ளலாம்.
- நாள்பட்ட நோய்களில் இருந்து விடுதலை
- அவசர நேரங்களில் முதலுதவியாக பயன்படுகிறது.
- உடல் மனம் தூயமையடையச் செய்கிறது.
- உடலின் சக்தி நிலை உயருகிறது.
- மனம் அமைதியடைகிறது.
- நேர்மறையான எண்ணம் உருவாகிறது.
- நினைத்த செயல்களை சிறப்பாக செய்ய இயலுகிறது.
- பொருளாதார வளர்ச்சி, தொழிலில் வெற்றி
- ஆன்மீக வளர்ச்சி
# முத்திரை யோகா பயிற்சிக்கு முன்:
- முழு ஈடுபாட்டுடனும், நம்பிக்கையுடனும் பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.
- பயிற்சியின் பொது முழு கவனமும் முத்திரையில் இருக்கும்படி அமையவேண்டும். அனைத்து பயிற்சியும் எப்போதும் வடக்கு திசையில் பயிற்சி செய்வது முழு பலனை தரும்.
- சீரான ஆழ்ந்த சுவாசமும் நல்ல இனிமையான முகபாவமும் அவசியம் இருக்க வேண்டும்.
- முத்திராவுக்கு உண்டான ஆசனத்தை இயன்ற அளவு கடைபிடிக்க வேண்டும்.
- நல்ல வெளிச்சம், காற்றோட்டம், அமைதியான சூழல் இருக்கும்படி அமைத்து கொள்ள வேண்டும்
- அதிகாலையில் முத்திரை பயிற்சி 100% பலனை தரும்.
- உணவு உண்ட 2 மணி நேர இடைவெளியிலும், நீர்த்த உணவானால் ½ மணி நேர இடைவெளியிலும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
- குளித்த உடனோ, பயிற்சியை முடித்த உடனோ குளிக்க கூடாது, 15 நிமிட இடைவெளி வேண்டும்.
- பெண்கள் மாதவிடாய் காலத்தில் அவசியம் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
- கருவுற்றிருக்கும் தாய்மார்கள் அவசியம் குருவின் நேரடி பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
- நீங்கள் மேற்கொண்டு இருக்கும் மருந்தை உடனடியாக நிறுத்த வேண்டாம் படிப்படியாக குறைத்துக் கொள்ளலாம்.
- 90 நாட்களில் உங்களின் ஆரோக்கியம் மீது எடுக்கப்படும் என்பது உறுதி உங்களின் தொடர் பயிற்சி அதனை சாத்தியப்படுத்தும்.
- இரண்டு கைகளிலும் முத்திரா யோக பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்
- இப்பயிற்சியில் முக்கியமான 11 முத்திரை யோகத்தை கற்க இருக்கிறோம்.
வாருங்கள் பிரபஞ்ச யோகத்திற்கு பயிற்சி செய்வோம், நலமுடனும் வளமுடனும் வாழ்வோம்.
முத்திரைகள் பல ஆயிரம் உண்டு அனால் அவை கால வெள்ளத்தால் அழிந்துவிட்டது. மிஞ்சி இருக்கும் சில நூறுகளை மட்டும் நாம் மீட்டு இருகின்றோம். அதில் இந்த அற்புத ஆற்றல் படைத்த 12 முத்திரை யோகப்பயிற்சியை பயின்று பயனடைவோம்.
- அஞ்சலி முத்திரை
- சுத்தி முத்திரை
- பிராண முத்திரை
- அபானவாயு முத்திரை
- வாயு முத்திரை
- ஆகாய முத்திரை
- பிரித்தீவி முத்திரை
- வருண முத்திரை
- சூரிய முத்திரை
- பங்கஜ முத்திரை
- ஞான முத்திரை
- குபேர முத்திரை