# மகராசனம்(முதலை போன்ற தோற்றம்)
# அறிமுகம்:
பெயர் : மகராசனம்
பொருள் : முதலை போன்ற தோற்றம்
வகுப்பு : தளர்வு நிலை ஆசனம்
பிரிவு : வயிற்றுபுறம் படுத்து செய்யும் ஆசனம்
நிலை : 4
# செய்முறை:
# ஆரம்ப நிலை:
குப்புறப்படுத்து இருகைகளையும் தலைக்கு மேலாக நேராக நீட்டவும். உள்ளங்கைகள் தரையின் மீது இருக்கட்டும். முகவாயைத் தரையின் மீது வைத்துக் கொள்ளவும். கால்களை இணைத்து வைத்துக் கொண்டு உள்ளங்கால் மேல்நோக்கி இருக்குமாறு நீட்டவும். தலை முதல் கால் வரை உடல் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.
# நிலை 1:
கால்களை அகற்றி வைத்துக் கொள்ளவும். குதிகால்கள் இரண்டும் ஒன்றையொன்று நோக்கியிருக்கட்டும். கால் விரல்கள் வெளிப்புறம் நோக்கியிருக்க வேண்டும்.
# நிலை 2:
வலது கையை மடக்கி உள்ளங்கையை இடது தோளின் மீது வைக்கவும். இதோ போன்று இடது கையை மடக்கி உள்ளங்கையை வலது தோளின் மீது வைக்கவும். முகவாயை இரண்டு முன் கைகளும் சேரும் இடத்தின் மீது வைக்கவும். (இந்த நிலையில் இருந்து ஓய்வு கொள்ளவும்)
# நிலை 3:
இடது உள்ளங்கையை விலக்கி இடது கையை நீட்டவும். இதே போன்று வலது உள்ளங்கையை விலக்கி வலது கையை நீட்டி நிலை-1க்கு வரவும்.
# நிலை 4:
கால்களை இணைத்து ஆரம்ப நிலைக்கு வரவும்.
# பலன்கள்:
உடல் ரீதியான பலன்கள் இது உடல் முழுவதும் நல்ல ஓய்வைத் தருகிறது.
# குணமாகும் நோய்கள்:
அதிக இரத்த அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றால் ஏற்படும் மன இறுக்கம் போன்ற பல தொல்லைகளுக்கு நல்லதோர் ஆசனம்.
# நுணுக்கமான குறிப்புகள்:
# வளையும் முறை:
உச்ச நிலையில் புஜங்களை ஊன்றுவதற்கு பதிலாக முழகால்களைத் தரையின் மீது ஊன்றவும். குதிகால்கள் தரையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
# சுவாசிக்கும் முறை:
உச்ச நிலையில் சாதாரண சுவாசம் கொள்க