# கிரியா
கிரியா என்பது சுத்தபடுத்துதல் / தூய்மையாக்கல் என்பதை குறிக்கிறது. இது யோக அப்பியாசத்தில் ஆறு நிலைகளாக உள்ளது.
- கபாலபதி – தலைபகுதியில் உள்ள அனைத்து உறுப்புகளை சுத்தபடுத்துதல்
- திரடாகா – கண்பகுதிகளை சுத்தபடுத்துதல்
- நேத்தி – மூக்கு / ,மூச்சு பாதைகளை சுத்தபடுத்துதல்
- தெளதி – உணவுபாதை, வயிறு சுத்தபடுத்துதல்
- நெளலி – வயிறு தசைகளை பலப்படுத்துதல்
- பஸ்தி – மலக்குடல் சுத்தம் செய்யும் முறை
இதன் மூலம் வாதம் / பித்தம் / கபம் சீரடைகிறது. நீண்ட கால சுவாச நோய்கள் / கண் நோய்கள் / செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் என அனைத்தும் சீராகிறது. (குறைகிறது) தலை முதல் மல வாய் வரை சுதபடுதும் முறை. இதனால் எந்த வித நோய்களில் இருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம். இதனை நவீன காலத்தில் யோக அறுவை சிகிச்சை முறை எனவும் அழைப்பது பொருத்தமானது.
இந்த பயிற்சிகளில் இன்னும் பல நுட்பங்கள் இருக்கிறது.
# கபலாபதி :
ஏக கபலாபதி / புலி உரும கபலாபதி / பர்வதாசன கபலாபதி / சர்வங்காசன கபலாபதி என பலவகைகள் உள்ளது. அதற்கென தனி பலன்களும் உள்ளன.
# திராடகா :
இதில் ஜோதி திராடகா / சந்திர திராடகா / சூரிய திராடகா என பலநிலைகள் உள்ளன.
# நேத்தி :
ஜலநேத்தி / தூத்த (பால்) நேத்தி / தைல (எண்ணெய்) நேத்தி / சூத்திர (நூல் தண்டு) நேத்தி / கிருத நேத்தி (நெய்) என பல வகைகள் உள்ளன.
# தெளதி :
வமன தெளதி(கஜகரணி) / தண்ட தெளதி / மூலிகை பொடி தெளதி / மூலிகை தைல தெளதி என பல வகைகள் உள்ளன.