# குபேர முத்திரா
அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாக கருதப்படுபவன் குபேரன் இந்த முத்திரை செய்வதன் மூலம் விரும்பிய வளங்களை பெறலாம். எனவேதான் இதை குபேர முத்திரை என்று அழிகிறார்கள்.
# செய்முறை:
- பெருவிரல், சுட்டு விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிகளும் ஒன்றாகத் தொடும்படி இணையுங்கள்.
- மற்ற இரண்டு விரல்களும் மடித்து உள்ளங்கையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
# அமரும் நிலை :
பத்மாசனம் (அ) சுகாசனம்
# நேரம்:
10 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை
# பலன்கள்:
- நினைத்த காரியங்களில் வெற்றி.
- வாழ்கையை வளமாக்கி கொள்ள உதவுகிறது.
- போதை பழக்கத்தில் இருந்து வெளிவர துணை புரிகிறது.
- சைனசில் இருந்து விடுபடவும் உதவுகிறது.