MuraliKrishnan
பாரம்பரிய மரு. சிவ ராஜேந்திரன்
எம்.எஸ்சி. யோகா
2004 முதல் பயிற்சி செய்பவர்
Contact +91 97905 67188
+91 97905 67188
ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஷ்ரமம்,
பதிவு எண் - 89/2010,
19.E, சிங்கபெருமல் கோயில் சன்னதி தெரு
காஞ்சிபுரம் - 631 501

# அஞ்சலி முத்திரா

# அஞ்சலி முத்திரை: (வாழ்வியல் முத்திரை)

நமஸ்கார முத்திரா (வடமொழியில்) = நாம + அஸ் + தே நாம = வணங்குதல் (அடிபணிதல்) அஸ் = நான் தே = உங்களை, உன்னை

# நிலை 1: மார்புக்கு அருகில்:

இந்த முத்திரை மூன்று வகையாக கையாளப்படுகிறது. அதில் முதல் வகை, தாய், தந்தை, உற்றார், உறவினர், அன்புக்குறியவர்க்கு வணக்கம் செலுத்தும்போது கைகளை மார்புக்கு மத்தியில் வைத்து வணங்க வேண்டும்.

# நிலை 2: நெற்றி போட்டுக்கு அருகில் :

அறிவுக் கண்ணைத் திறக்கும் ஆசான்கள் ஞானப் பாதையைக் காட்டும் குரு ஆகியோரை வணங்கும்போது கைகள் நெற்றிக்கு நேராக அமைய வேண்டும்.

# நிலை 3: தலைக்கு அருகில் :

கடவுளை வணங்கும்போது நான் ஒன்றுமில்லை. நீயே எல்லாம் என்ற சரணாகதித் தத்துவத்தை உணர்த்தும் வகையில் கைகளைச் சிரசின்மேல் கூப்பி வணங்கலாம்.

# செய்முறை :

  • இரு கைகளையும் இடைவெளியின்றி ஒன்றோடுடொன்று சேர்க்கவும்.
  • கண்களை மெதுவாக மூடித் தலையைச் சற்றே குனிந்து வணங்கவும்.
  • சீரான சுவாசம், நிமிர்ந்த நிலையிலும்
  • இப்பயிற்சியை கண்ணாடியின் எதிரே செய்வது சிறந்தது.

# முத்திரை நிலை:

நின்று கொண்டு, வஜ்ஜிராசனம், சித்தாசனம்

# நேரம்:

10 முதல் 12 முறை