MuraliKrishnan
பாரம்பரிய மரு. சிவ ராஜேந்திரன்
எம்.எஸ்சி. யோகா
2004 முதல் பயிற்சி செய்பவர்
Contact +91 97905 67188
+91 97905 67188
ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஷ்ரமம்,
பதிவு எண் - 89/2010,
19.E, சிங்கபெருமல் கோயில் சன்னதி தெரு
காஞ்சிபுரம் - 631 501

# மண் குளியல்

புற்று மண் கொண்டும் / களி மண் கொண்டும் / செம்மண் கொண்டும் வாத, பித்த, சிலோத்தம தன்மைக்கு ஏற்ப மண் தேர்வு செய்து இக்குளியல் செய்யபடுகிறது.

உடல் தத்துவம் பெரும் பகுதி மண்ணால் ஆனது. மண்ணுக்கு மண்ணே உபகாரம் என்ற நிலைக்கு தக்கவாறு இக்குளியல் முறை செய்யப்படுகிறது.

# இதில் சேரும் பொருட்கள்:

வெட்டிவேர், நன்னாரி, சந்தனம், திரிபலா, குப்பைமேனி, கஸ்தூரிமஞ்சள். வேம்பு, பழம்பாசி, சீமை அகத்தி, புளித்த தயிர், எலுமிச்சை, மழை நீர், முல்தானி மட்டி, வசம்பு, பூலங்கிழங்கு, பொடுதலை போன்ற மூலிகைகளை கலந்து மண்ணில் குழைத்து உடலுக்கு மண்காப்பு தலை முதல் பாதம் வரை தடவி சூரிய குளியலில் (காலை 7 to 10) 30 to 40 நிமிட இடைவெளியில் குளிர்ந்த நீரால் துடைத்து இம்முறை செய்யப்படுகிறது. (மாதம் இருமுறை செய்யலாம்)

# பயன்கள் :

முற்றிய தோல் நோய்கள், சரும வறட்சி, அரிப்பு, சொரியாசிஸ், பொடுகு போன்றவை குணமாகிறது. தோல் நல்ல பொலிவு அடைகிறது. உடல் நன்கு குளிர்ந்து உடல் உள்ளுறுப்புகள் பலம் அடைகிறது. இதயம் குளிர்ந்து, நீண்ட காலம் செயலாக்கம் பெறுகிறது. மூளை குளிர்ந்து நல்ல இதமான மனநிலை ஏற்படுகிறது. வயிறு குளிர்ந்து, செரிமான குறைபாடுகள் நீங்குகிறது. கணையம் குளிர்ந்து, சர்க்கரை வியாதி குணமாகிறது. மலசிக்கல் நீங்குகிறது. பாத வெடிப்பு குணமாகிறது. இவை அனைத்தும் அனுபவ உண்மை என்பதை இங்கு பதிவிடுவதில் நான் பெருமை அடைகின்றேன்.

# குறிப்பு:

தகுந்த அனுபவ இயற்கை மருத்துவரின் உதவியோடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. மாதம் இருமுறை செய்து கொள்ளலாம்.