# மூலிகை நீராவி குளியல்
(உடலில் மூலிகை எண்ணெய் தேய்த்து 30 நிமிடம் கழித்து )
மூலிகை நீராவி குளியல் என்பது ஒரு கொள்கலனில் (குக்கர்) கப மூலிகைகள் மற்றும் வாத மூலிகைகள் கொண்டு நிரப்பி அதை மூடி அடுப்பில் சூடேற்றி கொதிக்க வைத்து அதில் இருந்து வரும் நீரவியினை ஒரு மரப்பெட்டியில் நுழைந்து அதில் நாம் கழுத்து வெளியில் தெரியும்படி அமர்ந்து தலைக்கு ஈர துணியால் சுற்றி நிலையாய் இருந்து (30 நிமிடங்கள்) பின்பு வெளியேறுவது ஆகும்.
# பயன்படும் மூலிகைகள்:
வேம்பு, மஞ்சள், கற்பூர வள்ளி, துளசி, பேய் மிரட்டி, நொச்சி, தழுதாழை, சுக்கு, வெற்றிலை, குப்பைமேனி போன்ற மூலிகைகள்.
# பயன்கள்:
- தேவையற்ற உடல் சதை குறைவதால் உடல் எடை குறைகிறது.
- இரத்தசுத்தி (உப்பின் அளவு குறைவு)
- சிறுநீரக பாதுகாப்பு
- தோல்நோய்கள் நீங்குகிறது.
- வாத நோய்கள் நீங்கி உடல் வலி குறைகிறது
- பக்க வாதம் சரியாகிறது
- மூச்சு பாதையில் ஏற்படும் கிருமி தொற்று நீங்குகிறது.
- சுவாச உறுப்புகள் பலம் அடைகிறது.
- சளி நீங்குகிறது இன்னும் பல நன்மைகள் உண்டாகுகின்றன
# குறிப்பு:
தகுந்த அனுபவ இயற்கை மருத்துவரின் உதவியோடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. மாதம் இருமுறை செய்து கொள்ளலாம்