# வாழையிலை குளியல்
சூரிய ஆற்றலை நேரடியாக பயன்படுத்தி உடல் தூய்மை அடையக்கூடிய அற்புத பயிற்சி.
# சேரும் பொருட்கள் :
தேங்காய் எண்ணெய் / நல்லெண்ணெய் / விளக்கெண்ணெய் / அருகன் தைலம் / வெட்பாலை தைலம் இன்னும் பல தைலங்களை கொண்டு உடல் தன்மைக்கு ஏற்றவாறு தடவி பின்பு ஸ்வேதன கஷாயம் நல்ல சூடாக பருகி முழு வாழையிலையை விரித்து அதன்மீது படுத்து பின்பு உடல் முழுவதும் மூடி சுவாசிக்க மட்டும் துளையிட்டு தலைக்கு ஈர துணி கட்டி இக்குளியல் முறை செய்யப்படுகிறது.
காலம் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை. முடியும்போது உடல் நன்கு வியர்த்து வாழையிலை முழுவதும் வியர்வை நீரால் நிரம்பிருக்கும்.
# பலன்கள் :
உடலில் உள்ள நச்சு கழிவுகள் அகலும். வியர்வை துளைகள் மூலமாக வெளியேறி உடல் நல்ல புத்துணர்வு அடைகிறது.
வாழையிலையில் பச்சையம் சூரிய ஒளியில் ஒளிச்சேர்க்கை செய்து நம் உடலில் உள்ள தேவையற்ற கார்பன் கழிவுகளை உறிஞ்சும் நிகழ்வு நடைபெறுகிறது.
சிறுநீரகத்தின் செயல்பாடு 90% குறைக்கப்பட்டு நல்ல ஓய்வுக்கு வழிவகை செய்கிறது. அதனால் சிறுநீரகம் காக்கப்பட்டு அது சார்ந்த பிரச்சனைகள் விரைவில் குணமாகிறது
இயற்கை முறை டயாலிசிஸ் என்று சொல்லும் அளவிற்கு மிகுந்த நன்மை சார்ந்து ரத்தத்தில் உப்பின் அளவை குறைக்கிறது.
தோல்களுக்கு நல்ல பாதுகாப்பு மற்றும் மினுமினுப்பை கொடுத்து அழகாக்குகிறது.
தோல் நோய்கள் குணமாகிறது. அதிக உடல் எடையை குறைக்கிறது
இரத்தம் சுத்தம் அடைகிறது. கண்ணின் கருவளையம் நீங்குகிறது. இன்னும் பல நன்மைகள் கிடைக்கிறது. வைட்டமின் – D அதிகம் கிடைக்கிறது.
# குறிப்பு:
தகுந்த அனுபவ இயற்கை மருத்துவரின் உதவியோடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. மாதம் இருமுறை செய்து கொள்ளலாம்.