# இயற்கை மருத்துவம்
நம் உடல் ஐம்பூதங்களின் கலவை. இதனுடன் வாத, பித்த, கபம் முக்குற்றங்களோடு உடல் தன்மை பரிணமித்து இருக்கிறது. இந்த இயற்கை பரிணாமத்தில் ஏற்படும் நோய்களுக்ககாகவும், ஆரோக்கியதிற்க்காகவும் இந்த பஞ்ச பூதங்களை கொண்டும் அளிக்கப்படும் சிகிச்சையே இயற்கை மருத்துவம்.
நிலம் - மண் சிகிச்சை
நீர் - நீர் சிகிச்சை
காற்று - பிராண சிகிச்சை
ஆகாயம் - உபவாச சிகிச்சை
நெருப்பு - சூரிய சிகிச்சை
இது மட்டுமன்றி ஐம்பூதங்களின் பரிணாமங்களான யோகா, வர்மம், மூலிகை, காய், கனி, தண்டு, எண்ணெய் போன்ற பொருட்களை கொண்டு இலை, பஞ்சகவ்வியம்(பால், தயிர், நெய், சாணம், மற்றும் கோமியம்) நேரடியாக பயன்படுத்தி அளிக்கப்படும் சிகிச்சைக்கு இயற்கை மருத்துவம் என்று பெயர்.