MuraliKrishnan
பாரம்பரிய மரு. சிவ ராஜேந்திரன்
எம்.எஸ்சி. யோகா
2004 முதல் பயிற்சி செய்பவர்
Contact +91 97905 67188
+91 97905 67188
ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஷ்ரமம்,
பதிவு எண் - 89/2010,
19.E, சிங்கபெருமல் கோயில் சன்னதி தெரு
காஞ்சிபுரம் - 631 501

# வர்மம்

நல்லறிவால் இந்த உலக மக்களுக்காக மெய்ஞானத்தால் கண்டறியப்பட்ட எல்லா கலைகலும், மருத்துவ முறைகளும், நுட்ப அறிவியலும் ஏதோ ஒரு நிலையில் மக்கள் பயன்படும் அளவில் வந்து சேரும் என்பது திண்ணம். நெடுன்காலத்தில் இருந்து ஏதோ சில காரணங்களால் மறைமுகமாகவும் மிக இரகசியமாகவும் இருந்த வர்மக்கலை அதன் தடைகளை மீறி காட்டாற்று வெள்ளமாக வெளிவர துவங்கிவிட்டது. சித்தர்களும், மகா ஞானிகளும் நமக்கு அளிக்கப்பட்ட இந்த வர்மக்கலை / மருத்துவம் அதிசயதக்கவகையில் பயன் அளிக்க போகிறது.

வர்மக்கலை எதிரியைத் தாக்கும் ஆபத்தான கலை என்ற உணர்வு மக்களிடம் பரவி உள்ளது. இது உண்மையல்ல. வர்மக்கலையில் முக்கிய நோக்கமே மனிதனின் (உயிரினங்களின்) உடல், உயிர், மனம் என்ற மூன்றையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நோயில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ்வதுதான் சித்தர்களின் மிகப்பெரிய கோடை வர்மக்கலை. வர்மம் என்பதற்கு மிகச் சரியான எந்த விளக்கமும் நேரடியாக வர்ம நூல்களில் இல்லை. நுட்பமான மெய்ஞானத்தால் மட்டுமே அதன் உண்மைத்தன்மையினை உணர முடியும்.

வர்மம் என்பது உடலினுள் பாய்ந்து செல்லும். உடலியல் ஆற்றலைக் குறிக்கும். வர்மம் என்பதை “வன்மம்” என்றும் “மர்மம்” என்றும் அழைக்கப்படுகிறது.

“வாசி” என்னும் பிராணன் உடலில் பரவி பல்வேறு நுட்பமான செயல்களை தங்கு தடையின்றி செயல்படுத்தும் அதிசயமான செயல்பாடு ஆகும்.

உடலின் உயிர்நாடிகளில் தடையின்றி ஓடிக் கொண்டிருக்கும் “வாசி” என்னும் பிராணன் உடல் முழுவதும் பரவி ஊணொடு ஒன்றி இருக்கும் நிலையினையே வர்மம் என சித்தர்களால் உணர்த்தப்படுகிறது.

இத்தகைய வர்மம் படுவர்மம் (Major Point) – 18, தொடுவர்மம் (Minor Point) – 96 எனவும் ஆக மொத்தம் 108 ஆக அமைந்துள்ளது.

# படுவர்மம்:

படுவர்மம் 12 உடல் தளங்களில் அமைந்துள்ளது. படு – துன்புற்று, அழித்தல், பெருக்கம், என்று பல பொருள்களால் காணப்படுகிறது.

இந்த வர்மங்கள் அழிவை உண்டாக்கி மரணத்தை ஏற்படுத்துவதால் இப்பெயர் பெற்றது.

# இதன் வகைகள்:

  1. திலார்த்த வர்மம்
  2. நட்சத்திர வர்மம்
  3. செவிருத்தி வர்மம்
  4. பிடரி வர்மம்
  5. உறக்க வர்மம்
  6. தும்மி வர்மம்
  7. நேர் வர்மம்
  8. அடப்ப வர்மம்
  9. உறுமி வர்மம்
  10. வலிய அத்திச்சுருக்கி வர்மம்
  11. சிறிய அத்திச்சுருக்கி வர்மம்
  12. கல்லிடை வர்மம்

# தொடுவர்மம் (96):

தொடுவதால் ஏற்படும் வர்மங்களை “தொடுவர்மம்” என அழைக்கின்றோம். இந்த வர்ம புள்ளிகளை தூண்டி ‘வாசி’ என்னும் உயிராற்றலின் தடையினை சீராக்கி நோய்களை குணமாக்க இந்த வர்மங்களை சரியான முறையில் அழுத்தவேண்டும்.

கொண்டைகொல்லி வர்மம் முதல் கால் வெள்ளை வர்மம் வரை

# வர்ம அடங்கள்:

ஆசான்களின் நல்ல அனுபவத்தின் மூலம் பல வகையான அடங்கள் முறைகள் காணப்படுகிறது. இது ஆசான்களின் தனித்துவமான முறையாகவும் அமைந்துள்ளது. வர்ம தலங்களில் தாக்கம் ஏற்படும்போது வாசி தடைப்பட்டு சில இடங்களில் அடங்கி கிடந்தது விடுகிறது. இவ்விடமே அடங்கள் என்று அழைக்கப்படுகிறது. அதாவது சக்தி அடங்கிய இடமே அடங்கள் எனப்படுகிறது. தகுந்த முறைகொண்டு தடவி, தட்டி, அழுத்தி, உருவி என இந்த அடங்கள் சரி செய்யப்படுகின்றது.

உதாரணமாக ,

  1. அமிர்த அடங்கள்
  2. பிரகாச அடங்கள்
  3. வால சந்திர அடங்கள்
  4. நல்லிருப்பு அடங்கள்
  5. சர்வாங்க அடங்கள்
  6. முழு நாடி அடங்கள்
  7. செவிருத்த அடங்கள்
  8. தட்டடங்கள்
  9. ஏந்தி அடங்கள்
  10. பூமிதான அடங்கள்

இன்னும் பல நூறு அடங்கள்கள் உண்டு.

# வர்மத்தின் மூலம் நோய்த்தடுப்பு முறைகள்:

தினசரி நாம் இயல்பாக செய்கின்ற அனைத்து செயல்களிலும் உடலை நோய் வராமல் பாதுகாக்கும் அம்சம் இயல்பாகவே நமது உடலினுள் நடைபெறுகிறது. தற்கால வாழ்க்கை சூழலில் உடல் உழைப்பு மிகவும் குறைந்து அதிக நோய்கள் உருவாகிறது. இதனை தடுத்து ஆரோகியமடையவே இத்தகைய செயல்முறை பயிற்சிகள்.

  1. தலைவலி நீங்க
  2. கண், காத்து, மூக்கு, வாய், எலும்பு இணைப்புகளில் நல்ல ஆற்றல் பெருக
  3. பீனிசம் (சளி)
  4. ஆஸ்துமா
  5. மலச்சிக்கல்
  6. சர்க்கரை நோய்
  7. ஜீரண கோளாறு – வாயுத் தொல்லை
  8. கழுத்து வலி
  9. மாதவிடாய் சிக்கல்
  10. இடுப்பு வலி
  11. கால் வலி
  12. மூட்டு வலி

# சில நோய்கள் வராமல் தடுக்கும் பயிற்சி முறைகள்:

# 1. தலைவலி:

# முதல் செயல்முறை:

இரு உள்ளங்கை வெள்ளை வர்மத்தை காதின் பின்பக்கக் குழியில் மிதமாக அழுத்திப் பிடிக்கவும். நாடு மூன்று விரல்களையும் சுண்ணாம்புக் காலத்தில் மிதமாக அழுத்தி பிடிக்கவும்.

# இரண்டாம் செயல்முறை:

இரு உள்ளங்கை வெள்ளை வர்மத்தையும் இருபக்க சுண்ணாம்புக் காலத்தில் மிதமாக அழுத்தவும். இரு கை விரல்களையும் உச்சிக்கு மேல் மூன்று விரல் உயரத்தில் அமையுமாறு வைத்துக் கொள்ளவும். ஒரு கை விரலோடு அடுத்த கைவிரல்கள் தொடுதல் கூடாது.

தினமும் இப்பயிற்சியை காலை நேரத்தில் செய்தால் தலைவலி வராமல் தடுக்கலாம்.

# 2. கண், காத்து, மூக்கு, வாய், எலும்பு சந்திகளில் ஆற்றல் பெருக:

முதலில் இடது கையில் கட்டைவிரல் நீங்கலாக பிற நான்கு விரல்களையும் சேர்த்துப் பிடிக்கவும். சுண்டு விரலை இடப்பக்க கண்ணாடி காலத்தில் மிதமாக அழுத்தி பிடிக்கவும். மோதிர விரலைத் திலர்த காலத்தில் மிதமாக அழுத்தி பிடிக்கவும். நடுவிரலை இடப்பக்கப் புருவத்தில் மிதமாக அழுத்தவும். சுட்டு விரலை இடப்பக்கப் புருவத்தின் மேல் நெற்றியில் அழுத்தவும். கட்டை விரலை இடது குற்றி வர்மத்தில் அழுத்தவும். சுண்டு விரல் சார்ந்த உள்ளங்கை பகுதியை இடப்பக்க கன்ன எலும்போடு அழுத்திப் பிடிக்கவும். இது போல வலக் கன்னத்தில் வலக்கையால் செய்யவும். இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் செய்யலாம். அவ்வாறு செயகின்றபோழுது இடது கை மேல் வலது கை வருமாறு செய்வது நன்று. இப்பயிற்சி செய்யும் பொழுது வாயினுள் நாக்கு மிதக்கும் நிலையில் இருக்க வேண்டும்.

இப்பயிற்சியை காலை, மதியம், மாலை என மூன்று வேளை தினமும் செய்வதால் கண், காது, மூக்கு, வாய், எலும்பு சந்திகள் ஆகிய இடங்களில் ஆற்றல் பெருகும்.

# 3. பீனிசம் – சளி:

இடது கை நாடு மூன்று விரல்களையும் பட்சிநேர் வர்மத்தில் மிதமாக அழுத்தி கட்டை விரலை இடப்பக்க கண்ணா எலும்பின் கீழ் அழுத்திப் பிடிக்கவும். அதே போல வலது கை நாடு மூன்று விரலை பட்சிநேர் வர்மத்தில் இடக்கை விரல்கள் மேல் அழுத்திப் பிடிக்கவும். வலது கட்டை விரலை வலமூர்த்தி காலத்தில் அழுத்திப் பிடிக்கவும்.

இப்பயிற்சியை தினம் காலை அல்லது மாலையில் செய்து வந்தால் பீனிசம், சளி தொந்திரவு ஏற்படாமல் தடுக்கலாம். ஆன்ம வளர்ச்சியைப் பெறலாம். கர்ப்பக் காலத்தில் பெண்கள் செய்ய வேண்டாம்.

# 4. ஆஸ்துமா:

வலது கை நாடு மூன்று விரல்களை இடது விலங்கு வர்மத்தில் வைத்து வெளி, அகச் சுழற்சிகளைச் செய்யவும். அதுபோல இடது கை நடு மூன்று விரலை ஒன்று சேர்த்து வலப்பக்க விலங்கு வர்மத்தில் மிதமாக அழுத்தி மூன்று முறை வெளிச் சுழற்சி மூன்று முறை அகச் சுழற்சி செய்யவும்.

வலது கை நடு மூண்டு விரல்களை இடது அடப்பக்காலத்தில் அழுத்தி முன் பின்னாக மூன்று முறை அசைக்கவும். அதுபோல இடது கை நடு மூன்று விரல்களை வலது அடப்பக்காலத்தில் மிதமாக அழுத்தி முன்பின்னாக மூன்று முறை அசைக்கவும். இப்பயிற்சி இரண்டையும் காலை, மாலை இரு வேலை தினமும் செய்தல் நன்று. இதனால் சுவாசம் வலுப்பெறும். நுரையீரல், கல்லீரல் வலுப்பெறும். ஆஸ்துமா தொந்தரவைத் தடுக்கலாம்.

# 5. மலச்சிக்கல்:

வலக்கை, உள்ளங்கை வெள்ளை வர்மத்தை மூக்கு முனையில் மிதமாக அழுத்தி நடு மூன்று விரல்களையும் பட்சிநேர் வர்மத்தில் அழுத்தி பக்கவாட்டில் மூன்று முறை அசைக்கவும்.

நம் வலது கை விரலின் முனைப்பகுதியை பால வர்மத்தில் அழுத்தி மேலிருந்து நடு கீழாக வலப்புறமாக அல்லது இடப்புறமாக சுற்றவும். இரவு படுக்கைக்கு முன்பு இப்பயிற்சியை செய்க. காலை எழுந்த உடனும் இப்பயிற்சியை செய்யலாம். இருமுறை செய்தாலும் தவறில்லை. இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பெண்கள் கர்ப்பக் காலத்தில் முதல் முறையை தவிர்க்கவும்.

# 6. சர்க்கரை நோய்:

நம் ஆகாயத்தை நோக்கிப் படுக்க வேண்டும். இரு கை விரல்களையும் ஒன்றோடு ஒன்று கோர்க்க வேண்டும். கோர்த்த கைகளை உறுமிக் காலத்தின் மேல் வைத்து கைகள் உள்ளே, வெளியே இயங்குமாறு மூன்று முறை அழுத வேண்டும்.

இப்பயிற்சியை மாலை நேரத்தில் செய்வது நல்லது. சர்க்கரை நோய் இல்லாதவர்கள் நோய்த் தடுப்பிற்காக வாரம் இரு முறை செய்தால் போதும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் செய்யலாம். சர்க்கரை நோயை தடுக்கலாம்.

# 7. ஜீரணக் கோளாறு – வாயுத் தொல்லை:

இடது கை நடு மூன்று விரல்களை தொப்புளின் மேல் வைத்து, வலது கை விரல்களை இடது கை விரல்கள் மேல்வைத்து, உள்ளே வெளியே அழுந்துமாறு மூன்று முறை அசைக்கவும். இப்பயிற்சியை தினமும் காலையில் செய்வதால் ஜீரணக்கோளாறு, வாயுத் தொல்லை ஏற்படமால் தடுக்கலாம்.

# 8. கழுத்து வலி:

இரண்டு கை மணி பந்த்வர்மங்களையும் சேர்த்து அழுத்தி கழுதை மெதுவாக அசைத்துப் பார்க்கவும். இடது உள்ளங்கை, வெள்ளை வர்மத்தை வலது காரை எலும்பு குழியில் அழுத்தி நாடு மூன்று விரல்களை காக்கட்டை காலத்தில் அழுத்திப் பிடிக்கவும். அவ்வாறே வலது கை இடது காக்கட்டையில் செய்யவும். இப்பயிற்சியால் கழுத்து வலி மற்றும் தோள் வலியைத் தடுக்கலாம். தினமும் இரண்டு வேலை செய்யலாம்.

# 9. மாதவிடாய்ச் சிக்கல்:

திரிகரண நமஸ்காரம் இது. வஜ்ஜிராசனத்தில் அமர்ந்து கால் இரண்டையும் பின்னலிட்டு, கால் விரல்கள் நிலத்தில் ஊன்றும்படிச் செய்து, அடி வயிறு அமுங்கும் நிலையில் குனிந்து, இரு முழங்கைகளை நிலத்தில் ஊன்றி பட்சிநேர் வர்மம் நிலத்தில் அழுந்துமாறு செய்யவும். இதனை கர்ப்பக்காலத்தில் பெண்கள் செய்ய வேண்டாம். பிற காலங்களில் காலை, மாலை செய்யலாம். கர்ப்பப்பை வலுப்பெறும். கர்ப்பப்பை தொடர்பான தொந்தரவுகள் வராமல் தடுக்கலாம்.

# 10. இடுப்பு வலி:

இரு உள்ளங்கை வெள்ளை வர்மங்களும் ஒன்றோடு ஒன்று பொருந்தும் வகையில் அழுத்திப் பிடிக்கவும். இதனை தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை செய்தால், இடுப்புப் பகுதிக்கு ஆற்றல் அதிகரிக்கும். இடுப்பு வலி தடுக்கப்படும்.

# 11. கால் வலி:

இடது கொம்பேரிக் காலத்தில் இடது கை விரல்களை உள்ளே வெளியே அழுந்துமாறு செய்வதால் கால்வலி வரமால் தடுக்கலாம். இம்முறையை 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் இரு வேலை செய்யலாம். பிறர் வாரம் இரு முறை செய்யலாம். இதனால் கால்வலி சரியாவதோடு இடுப்பு வலியும் சரியாகும்.

# 12. மூட்டு வலி:

கால் முட்டினைச் சுற்றியுள்ள தசைப் பகுதிகள் உருண்டு, சுழன்று வரும்படி இயக்குதல் வேண்டும். வலி ஏற்படாமல் மூட்டுப் பகுதியில் உள்ள தசைப் பகுதியைக் கவ்வி பிடித்து மூட்டைச் சுற்றி இடைவிடாமல் சுழற்ற வேண்டும். இதனால் கால் மூட்டு வலி வராமல் தடுக்கலாம். தினமும் ஒரு முறை செய்யலாம்.

# 13. இரத்த அழுத்தம்:

இடது உள்ளங்கையை வலது முழங்கை மூட்டிலிருந்து அக்குள் வழியாக, விலா எலும்பு வழியாக கடைசி விலா எலும்பு வரை தடவ வேண்டும். அது போல வலது கையால் இடது பக்கமும் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கமும் மூன்று முறை தடவ வேண்டும்.

இதனால் குறை இரத்த அழுத்தமும், நிறை இரத்த அழுத்தமும் சரியாகும். இரத்த அழுத்தம் வராமல் தடுக்கலாம். தினமும் காலை, மாலை இரு வேளை செய்யலாம்.

# 14. கோப உணர்வு:

ஒட்டு வர்மத்தை கையில் உள்ள நடு மூன்று விரல்களால் மிதமாக அழுத்திக் கழுத்து வரை மிதமாக தடவவும். மூன்று முறை தடவலாம்.

இதனை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளலாம். இதனால் கோப உணர்வு கட்டுப்படுத்தப்படும்.

# நோய் நீக்கும் முறைகள்:

# 1. தலைவலி:

சுட்டுவிரல், நடுவிரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களையும் இணைத்து அவற்றின் முனைப்பகுதியை இரண்டு பக்க சுண்ணாம்புக் காலத்திலும் மிதமாக அழுத்தி வைத்து முன் பின்னாக மூன்று முறை அசைக்கவும்.

இருகைகளிகளும் உள்ள கட்டை விரலின் மையப்பகுதியை அண்ணான் காலத்தில் மிதமாக வைத்து முதலில் பின் பக்கமாக (காது நோக்கி) மூன்று முறை சுழற்றவும். இரண்டாவது மூன்று முறை முன் நோக்கி (கண்ணை நோக்கி) சுழற்றவும்.

இவ்விரண்டு வர்மப் புள்ளிகளையும் மிதமாக இயக்குவதால் நாள்பட்ட தலைவலி, ஒருபக்கத் தலைவலி, தலை அழுத்தம், தலைக்கு ஆற்றல் செல்லாமை போன்ற நோய்கள் நீங்கும். நினைவாற்றல் பெருகும். உடல் வலுப்பெறும்.

# 2. பீனிசம்:

நடுமூன்று விரல்களையும் சேர்த்து பட்சிநேர் வர்மத்தில் மிதமாக அழுத்தி கட்டை விரலை வலமூர்த்தி காலத்தில் மிதமாக அழுத்தி வலப்பக்கச் சுழற்சி, இடப்பக்கச் சுழற்சி மூன்று, முறை செய்யவும்.

இதனால் பீனிசம், மூக்கடைப்பு, தலைவலி ஆகிய நோய்கள் நீங்கும். மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும். எலும்பு சந்திகளுக்கு ஆற்றலைத் தரும்.

# 3. ஆஸ்துமா:

இரு கைகளிலும் உள்ள நடுமூன்று விரல்களையும் சேர்த்து விலங்கு வர்மத்தில் மிதமாக வைத்து வெளிப்புறமாக மூன்று சுழற்சி உட்புறமாக மூன்று சுழற்சி செய்யவும்.

இரு கைகளிலும் உள்ள நடுமூன்று விரல்களையும் அடப்பக்காலத்தில் மிதமாக வைத்து முன் பின்னாக மூன்று முறை அசைக்கவும். பெண்களுக்குப் பின்புறம் நின்று அசைக்கவும்.

இதனால் ஆஸ்த்மா நீங்கும் பிராணவாயு தேவையான அளவு உட்செல்லும். கால்கள் வலுப்பெறும். நுரையீரல், கல்லீரல் வலுப்பெறும்.

# 4. மலச்சிக்கல்:

நடு மூன்று விரல்களின் நுனிபகுதியை பட்சிநேர் வர்மத்தில் வைத்துப் பக்கவாட்டில் மிதமாக அழுத்தவும். இம்முறையை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்கவும். வலக்கையின் நடு விரலின் நுனிப்பகுதியை மிதமாக பாலவர்மதில் மேலிருந்து கீழாகச் சுழற்றவும். இம்முறை சர்க்கரை நோய், மூலம் உள்ளவர்களுக்கு செயல்படவில்லை. மேற்கூறப்பட்ட இரண்டு முறைகளையும் சேர்த்துச் செய்வதால் மலச்சிக்கல் நீங்கும்.

# 5. சர்க்கரை நோய்:

நோயாளியை ஆகாயத்தை நோக்கிப் படுக்கச் செய்ய வேண்டும். இருகை விரல்களையும் ஒன்றோடு ஒன்று கோர்க்கச் செய்யவும். கோர்த்தக் கைகளை உறுமிக் காலத்தின் மேல் வைத்து நாம் அவரது கைகளை மிதமாக உள்ளே வெளியே இயங்குமாறு அசைத்து அழுத்தி விடவும்.

இதனால் சர்க்கரை நோய் நீங்கும். தொடை, இடுப்புப் பகுதிகளுக்கு ஆற்றல் கிடைக்கும்.

# 6. ஜீரணக் கோளாறு – குடற்புண்:

நோயாளியைப் படுக்க வைத்து இரண்டு கைகளிலும் உள்ள நடு மூன்று விரல்களை, பள்ள வர்மத்தில் மிதமாக வைத்து வெளிச் சுழற்சி, அகச் சுழற்சி மூன்று முறை செய்யவும்.

நோயாளியைப் படுக்க வைத்து இடது கை, நடு மூன்று விரல்களைத் தொப்புள் மேல் வைத்து வலக்கை விரல்களை இடது கை விரல்கள் மேல் வைத்து உள்ளே, வெளியே இயங்கும்படி மூன்று முறை செய்யவும்.

இவ்விரண்டு முறைகளால் ஜீரணக் கோளாறு, மலச் சிக்கல், வாயுத்தொல்லை, குடற்புண் நீங்கும். பசி ஏற்படும்.

# 7. கழுத்து வலி:

நடு மூன்று விரல்களால் இருபக்க காக்கட்டைக் காலத்தில் மிதமாக அழுத்தவும். மணிபந்த வர்மத்தில் கை கட்டை விரலால் மிதமாக அழுத்தவும்.

இதனால் நாள்பட்ட கழுத்துவலியும் நீங்கும், தோள் வலியும் நீங்கும்.

# 8. மாதவிடாய்ச் சிக்கல்:

நோயாளியைப் படுக்க வைத்து பள்ள வர்மத்தை நாடு மூன்று விரல்களால் மிதமாக அழுத்தி மூன்று முறை வெளிப்புறமாகச் சுழற்சி செய்யவும். நோயாளியைப் படுக்க வைத்து இடது கை கட்டைவிரலின் நடுப்பகுதியைக் குடுக்கை வர்மத்தில் வைத்து வலது கை கட்டை விரலால் இடது கை கட்டை விரலை மிதமாக அழுத்தவும்.

இவ்விரண்டு முறைகளையும் சேர்த்துச் செய்யவும். இதனால் உதிரச் சிக்கல் போன்ற இன்னபிற கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் நீங்கும், உடல் வலுப்பெறும்.

# 9. இடுப்பு வலி:

உள்ளங்கை வெள்ளை வர்மத்தில் கைக்கட்டை விரலால் அழுத்திப் பிடிக்கவும். கையில் உள்ள நடு மூன்று விரல்களால் கொம்பேறிக் காலத்தில் மிதமாக உள்ளே வெளியே அழுத்தி விடவும்.

இவ்விரண்டு முறைகளையும் செய்தால் இடுப்புவலி நீங்கும். இரண்டாவது முறையை மட்டும் செய்தால் இடுப்பு வலி நீங்குவதோடு கால்வலியும் நீங்கும். முதல் முறையை மட்டும் செய்தால் நினைவாற்றல் பெருகும்.

# செய்முறையும் கால அளவும்:

மேற்குறிப்பிட்ட நோய் நீங்கும் முறைகளை பின்வருமாறு செய்து கொள்ளலாம்.

நோய் அதிகமாக இருந்தால் வாரம் மூன்று நாட்கள் தினம் ஒரு முறை வீதம் செய்து கொள்ளலாம். நோய் குறைவாக இருந்தால் வாரம் இரு நாள் அல்லது ஒரு நாள் வீதம் செய்து கொள்ளலாம். நோயின் தன்மை மிக அதிகமாக இருந்தால் தினந்தோறும் செய்து கொள்வதில் தவறில்லை.

# இப்பயிற்சியால் நீங்கும் நோய்கள்:

  • தலைவலி
  • தலைச்சுற்று
  • ஒற்றைத்தலைவலி
  • பீனிசம்
  • ஆஸ்த்மா
  • சர்க்கரை நோய்
  • குடற்புண்
  • வாயுத்தொல்லை
  • மூட்டுவலி
  • கால்வலி
  • மாதவிடாய்க் கோளாறுகள்
  • இரத்த அழுத்தம்
  • மலச்சிக்கல்
  • ஞாபக மறதி
  • பசியின்மை
  • தோள்வலி
  • கர்ப்பப்பை கோளாறு
  • நுரையீரல், கல்லீரல் தொடர்பான நோய்கள்
  • எலும்பு, சந்திகளில் வலி
  • மூக்கடைப்பு
  • கண்பார்வைக் கோளாறு
  • தூக்கமின்மை
  • சன்னி போன்ற நோய்கள் நீங்கும்